நிறையபேர் உடல் எடை அதிகமாவதற்கே தான் அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது தான் காரணம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வெறும் உருளைக்கிழங்கை சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் எப்படி சாப்பிடுகிறோம் என்பது மட்டும் தான் முக்கியம். எப்படி சாப்பிட்டால் எடை குறையும் என்று தெரிந்து கொண்டு எடையைக் குறைக்க ஆரம்பியுங்கள்.
உண்மையில் உருளைக்கிழங்கு இல்லாமல் உங்கள் உணவு முழுமையாகுமா? உருளைக்கிழங்கு வறுவலைப் பார்த்தால் நம்முடைய கை தான் சும்மா இருக்குமா?... மசியல் முதல் வருத்தல் வரை இந்த எளிமையான காய்கறியான உருளைக்கிழங்கு எல்லா வகைகளிலும் சமைத்து உண்ணக் கூடிய வகையில் பல்சுவை கொண்டது. உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடாதவர்கள் ரொம்பவே அரிது. அதே
சமயம் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடாத உணவு என்று (அரிசியைத் தவிர), உருளைக்கிழங்கை பற்றி வதந்தி பரவியிருக்கிறது. உண்மையில் உருளைக்கிழங்கு எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவாத காய்கறியா? இது உண்மை தானா?
கட்டுக்கதைகள்
கட்டுக்கதைகளை உடைக்க வேண்டிய நேரமிது!. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது! உங்கள் கொழுப்பை எரிக்கும் முயற்சிகளுக்கு உருளைக்கிழங்கு உதவாது என்று நினைப்பது கட்டுக்கதை நம்மில் பெரும்பாலானோர் உருளைக்கிழங்கை ஆரோக்கியமான உணவு என்று கருதுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசனை செய்வோம். இதில் உள்ள கலோரிகளும் கார்போஹைட்ரேட்களும் உண்மையில் எடை குறைப்புக்கு உதவாது என்று நினைக்கிறீர்கள், சரியா? சரி, நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம், கோல்ட் பாயில் முறையில் வேகவைத்த உருளைக்கிழங்குகள் வெகு சீக்கிரமாக உங்கள் எடையை குறைக்கும் முயற்சிகளின் பலனை இரட்டிப்பாக்க கூடிய எளிமையான உணவுப் பொருளாகும்.
கொழுப்பைக் குறைக்கும்..
வேகவைத்த உருளைக்கிழங்கை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உண்மையில் ஒரு ஆரோக்கியமான தேர்வாகும். உருளைக்கிழங்கில் ஏராளமான பொட்டாசியமும் உயர் இரத்த அழுத்தத்தை விரைவாக குறைக்கக்கூடிய நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. மேலும் இது உங்கள் ஜீரண சக்தியை ஒழுங்குபடுத்தி அத்துடன் கொழுப்பையும் குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
மேலும் இதில் விட்டமின் ஏ, சி, பி-காம்ப்ளக்ஸ் சத்துக்களும் கூட்டு கார்போஹைட்ரேட் சத்துகளும் அடங்கியிருக்கின்றன. இது உங்கள் ஜீரண மண்டலத்தில் எனர்ஜியை மெதுவாக வெளிவிடும் உத்தரவாதத்தை தருகிறது. மேலும் இது இரத்தத்தில் ஹைப்போக்ளைசீமியாவின் அட்டவணையில் குறைந்த மதிப்பெண்களை பெற்று சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவுத் தேர்வாக இருக்கிறது.