சின்னாளப்பட்டி பேரூராட்சியின் சிறப்புகள் பற்றி பொதுமக்கள் கூறுகையில் மக்கள் குறைகள் குறித்து பேசுவதற்காக அலுவலகத்துக்கு செல்லும் போது அவர்களை கனிவுடன் வரவேற்று அமர வைத்து பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்ப்பதில் செயல் அலுவலரும் மற்ற அதிகாரிகளும் பணியாளர்களும் கைதேர்ந்தவர்கள் என்றால் மிகையாகாது அதே போல் சின்னாளப்பட்டிப் பேருராட்சியில் அதிக வாக்குகள் பதிவானதற்கு காரணம் சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் என்றே கூற வேண்டும் பேருராட்சிப் பகுதி மக்களுக்காக குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து உடனடியாக மின்சாரம் கொடுக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார் .
18 வார்டுகளிலும் தினந்தோறும் குடிநீர் கொடுத்து வருகிறார்கள் சின்னாளப்பட்டி செயல் அலுவலர் திறம்பட செயல்பட்டால் பொதுமக்கள் பிரச்சினை என்பதையே பண்ண மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் என்றனர் பேருராட்சிக்குட்பட்ட பூங்கா இடங்களில் சுற்றிலும் வேலி அமைத்து மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
மழை நீர் சேகரிப்பு 75 % முடித்து வைக்கப்பட்டுள்ளது திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேட்ச் மற்றும் லேபிள் தயார் செய்யப்பட்டு பேருராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது இதே போல் பலவித கலை நீகழ்ச்சிகளும் நடத்தப் பட்டுள்ளன செயல் அலுவலர் கலையரசியிடம் பேரூராட்சி சம்பந்தமாக நமது செய்தியாளர் கேட்டபோது சின்னாளப்பட்டிப் பேருராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அது அரசியல் கட்சியினராக இருக்கட்டும் பொது மக்களாக கூட இருக்கட்டும் அனைவரும் எனது சகோதர சகோதரிகள் போல் பாவித்து வருகிறேன் .
நான் அலங்காநல்லூர். பேருராட்சியில் செயல் அலுவலராக இருந்த போது முன்னாள் முதல்வர் அம்மாவிடம் சிறந்த பேரூராட்சி செயல் அலுவலர் என்ற பெயரையும் பரிசையும் வாங்கினேன் நான் 1986ல் தேனி மாவட்டத்தில் செயல் அலுவலராக பணியில் சேர்ந்தேன் பிறகு பதவி உயர்வு பெற்று மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பின்னர் அலங்காநல்லூர் பேரூராட்சியில் பணியாற்றிய போது பாரதப் பிரதமர் விருதும் முதல் அமைச்சர் விருதும் பெற்றேன் நான் எந்த ஊரில் செயல் அலுவலராக வேலைப் பார்த்தாலும் அந்த ஊர் மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்றார்.
இவருக்கு உறுதுணையாக துப்புரவு ஆய்வாளர் சித்ரா மேரி மேற்பார்வையாளர்கள் தங்கத்துரை சரவணன் அகிலன் மற்றும் துப்புபுரவு பணியாளர்களும் பேருராட்சியில் உள்ள அதிகாரிகளும் உறுதுணையாக இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர், துணை முதல்வர் போல் வருங்காலத்தில் நல்ல சிறந்த பேருராட்சிக்கான விருதை சின்னாளப்பட்டிப் பேருராட்சி பெறும் என்பதை நம்புவோமாக.
சாதனைக்கு தயாராகும் சின்னாளப்பட்டி பேரூராட்சி